அஜித்துக்காக கதை!-இயக்குனர் அட்லீ அதிரடி!!

துணிவு படத்தை தொடர்ந்து அஜித் குமார். இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடா முயற்சி படத்தில் நடித்து வருகிறார்.தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் அட்லீ அஜித் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், எனக்கு அஜித் சாரை ரொம்ப பிடிக்கும். அவருடன் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்.அவர் ஓகே சொல்லிவிட்டால் கண்டிப்பாக ஒரு படம் செய்வேன் . அஜித் சாருக்கு தகுந்த மாதிரி கதை இருக்கும் என கூறியுள்ளார் .

தற்போது இயக்குனர் அட்லீ விஜய் மற்றும் ஷாரூக்கை இணைத்து படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் தற்போது இப்படத்தின் ஸ்கிரிப்ட் உருவாக்கத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது