கலைஞர் நூற்றாண்டு விழா: ரஜினி,கமல் உள்பட திரையுலகமே திரள்கிறது !

திரைப்படங்கள் மூலம் சமூக நீதியை உரக்கச் சொன்ன கலைஞருக்கு தமிழ் திரையுலகம் சார்பில் பிரம்மாண்டமான நூற்றாண்டு விழா நடத்தப்பட உள்ளது.கலைஞர் 100 என்கிற பெயரில் நடத்தப்பட உள்ள இந்த விழாவை தமிழ் திரைப்படத்துறையின் அனைத்து சங்கங்களுடன் இணைந்து தமிழ்த்திரைப்பட   தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், பெப்சி என ஒட்டுமொத்த சங்கங்களும் இணைந்து நடத்த உள்ளன. சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் வருகிற டிசம்பர் 24-ந் தேதி இந்த பிரம்மாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விழா குழுவினர் கூறியதாவது,
 ” திரையுலகின் மற்ற   சங்கங்களுடன் இணைந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில்,  கலைஞர் அவர்கள் ஆற்றிய  மகத்தான சாதனைகளை அவரது நூற்றாண்டில் கலைஞர்-கலைஞர் 100 எனும் மிக பிரம்மாண்டமான விழாவாக வரும் டிசம்பர் 24ஆம் தேதி  சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.கலைஞர் மு. கருணாநிதி  திரையுலகில் கதாசிரியராக, வசனகர்த்தாவாக, திரைக்கதை ஆசிரியராக, பாடலாசிரியராக தயாரிப்பாளராக அவர் எழுபத்து ஐந்து படங்களில் தனது பங்களிப்பை சிறப்பாக அளித்துள்ளார். நேரடி தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் படத்தலைப்பு வைத்தால் கேளிக்கை வரி ரத்து செய்து உதவினார். அரசாங்க இடங்களில் படப்பிடிப்பு நடத்தினால் பாதி கட்டணம் என்று அறிவித்தார். மேலும், திரைப்பட மானிய தொகையினை வருடந்தோறும் வழங்கினார். ஐந்து முறை அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்தார்.  தனது வசனத்தால் மக்களின் சிந்தனையை தூண்டிவிட்டார். அவர் வசனம் எழுதிய ஒவ்வொரு  படத்தின் துவக்கத்திலும் அவர் பேசும் பேச்சை கேக்கவே திரையங்கு நோக்கி ஏராளமான மக்கள் வந்தார்கள். 

  அகில இந்திய அளவில் தெலுங்கு கன்னடம், பெங்காலி, மலையாளம், இந்தி மராத்தி, ஒரியா, குஜராத்தி,  என பல மொழி திரைப்பட கலைஞர்களை இந்த விழாவில் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுக்க உள்ளோம்.கலைஞர் வசனம் எழுதிய படங்களில் இருந்து பல்வேறு காட்சிகள் நேரடியாக நடித்து காட்ட திரைப்பட நட்சத்திரங்கள் தயாராகி வருகின்றனர்.  இந்த மாபெரும் விழாவில் முதல்கட்டமாக நடிகர்கள்  கமலஹாசன்,ரஜினிகாந்த் ,இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர்   கலந்து கொள்ள இசைவு தெரிவித்துள்ளார்கள்

மேலும் இந்த விழாவில் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள்  என பலரும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளோம்.சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் குறைந்த பட்சம் 35000 பேர் இந்த விழாவினை அமர்ந்து பார்க்கும் வண்ணம் மேடை அமைக்கப்பட உள்ளது.     இந்த மாபெரும் விழாவில் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.  நடனம், நாடகம், இசைக்கச்சேரி, ஒலி, ஒளி காட்சிகள், ட்ரோன்கள் படையெடுப்பில் கண்கவர் நிகழ்ச்சிகள் மேலும் பல வித்தியாசமான நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவரும் வண்ணம் உருவாக்கி வருகிறோம்.

இந்த விழாவினை திரை நட்சத்திரங்களும், திரைக்கலைஞர்களும் பங்கெடுத்து சிறப்பிக்க இருப்பதால் அடுத்த மாதம் (டிசம்பர்) 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாட்கள்  தமிழ்நாடு முழுவதும் படப்பிடிப்புகள் உட்பட திரை உலக வேலைகள் எதுவும் நடைபெறாது. இந்த மாபெரும் விழாவினை சிறப்பிக்கும் விதமாக  தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் , விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் , மற்றும் மத்திய, மாநில அமைச்சர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.இந்த மாபெரும் விழா குறித்த நிகழ்ச்சிகளின் விவரங்கள் அனைத்தும் திரை உலகினருக்கும், பொதுமக்களுக்கும்விரைவில் அறிவிக்கப்படும்.” என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர் .

இந்நிகழ்வில், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என்.ராமசாமி, செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், பொருளாளர் எஸ்.சந்திரபிரகாஷ்,இணைச் செயலாளர் எஸ்.சவுந்தர பாண்டியன் மற்றும் கலைப்புலி எஸ். தாணு,ஆர்.கே.செல்வமணி,பேரரசு, அருள்பதி,கே ராஜன்,டி.ஜி.தியாகராஜன்.டி சிவா,நடிகைகள் .லதா,லலிதகுமாரி,பசுபதி,.மற்றும் பிரேம்.சிவசக்தி பாண்டியன்.சித்ரா லட்சுமணன்.தனஞ்செயன்.சுரேஷ் காமாட்சி.கே.எஸ்.சீனிவாசன்,அன்பாலயா பிரபாகரன்
 ஞானவேல் ஹேமசந்திரன், சௌந்தர் நடிகர் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர்கள் ஹெச் முரளி. கபார் .திருமலை.ஜே.சுரேஷ்,. பிரவீன் காந்தி,பெப்சி விஜயன்.பழனிவேல்,.அண்புதுரை, .ஏ.எல்.உதயா.ராமச்சந்திரன்.கமலக்கன்ணன்.ஜி.எஸ். முரளி.சாலை சகாதேவன்.ரஞ்சித்குமார்.ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.