இங்கு நேற்று இரவு முக்கியமான சண்டைக்காட்சி ஓன்று படமாக்கப்பட்டு வந்தது.அப்போது இரவு 1 மணியளவில் திடீரென அங்கு அமைக்கப்பட்டு இருந்த ரோப் காமிரா ஓன்று திடீரென அறுந்து விழுந்தது அப்போது அங்கு நடித்து கொண்டிருந்த சூர்யாவுக்கு மிக அருகில் விழுந்தது .இதில் நடிகர் சூர்யாவுக்கு தோள் பட்டையில் காயம் ஏற்பட்டது .நல்லவேளையாக இந்த விபத்தில் சூர்யா நூலிழையில் உயிர் தப்பியதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
இச் சம்பவம் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏறபட்டது உடனடியாக சூர்யா அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டார் படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது.விபத்து குறித்த தகவல் அறிந்த நாசரத் பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து படக்குழுவினரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இங்கு ஏற்கனவே நடந்த ‘இந்தியன் 2’ படப்பிடிப்பின் போதும், காலா படப்பிடிப்பின் போதும் எதிர்ப்பாராமல் ஏற்பட்ட விபத்துகளில் சில தொழிலாளர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.