கடந்த வாரம் இப்படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் சூர்யாவுக்கு தோள் பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது மும்பையில் ஓய்வெடுத்து வருகிறார். இந்த படத்தின் வரலாற்று கால காட்சிகள் இதுவரை தமிழ் சினிமாவில் பார்க்கப்படாத அளவுக்கு மிகவும் பிரமாண்டமாக இருக்கும் என்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி 70சதவீத படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாகவும் மீதமுள்ள 30சதவீத படப்பிடிப்புகள் வரும் டிசம்பருக்குள் முடிவடைந்துவிடும் என்றும் 2 பாகங்களாக உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் இப்படத்தின் கிளைமாக்ஸ் இரண்டாம் பாகத்துக்கு ஏற்றவாறு முடிக்கப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன