ஒரு காலத்தில் தமிழ்த்திரையுலகை கலக்கிய நடிகைகள் அம்பிகா, ராதா ஆகியோருக்குச் சொந்தமான ஏஆர்எஸ் கார்டன் ஸ்டுடியோவில் தற்போது எந்த ஒரு படப்பிடிப்பையும் நடத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருந்த பிரபல தயாரிப்பாளர் காட்ரகட்ட பிரசாத்திடம் ,நடிகைகள் அம்பிகா, ராதாவின் தம்பி அர்ஜுன் ரூ.25 லட்ச ரூபாயை கடனாக பெற்றுள்ளார்.
இந்த விவகாரம் ஒரு கட்டத்தில் சுற்றி இருவருக்கும் இடையே தகராறாக மாறியது.இதையடுத்து , காட்ரகட்ட பிரசாத் தயாரிப்பாளர் சங்கம்மற்றும் , பெப்சி சங்கத்தினரிடம் புகார் கொடுத்துள்ளார்.
அவர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து ஏஆர்எஸ் ஸ்டுடியோவில் படப்பிடிப்புகளை நடத்தத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.