இது குறித்து விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மிக்ஜாம் புயல் மழை காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் நலனைப் பாதுகாக்கும் வகையிலும், காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கிலும் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் வருகின்ற 14.12.2023 அன்று காலை 8.05 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற உள்ளது.
வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய பகுதிகளில் 25 இடங்களில் பல்துறை மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்க உள்ள இம்மருத்துவ முகாம்கள் வழியாக குழந்தைகள், பெண்கள், முதியோர்களுக்கு நோய் தடுப்பு மருந்துகள், மாத்திரைகள் மற்றும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன” இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி: வார்டு 35, 45, 46
திரு.வி.க.நகர் சட்டமன்ற தொகுதி: வார்டு 72,75
கொளத்தூர் சட்டமன்ற தொகுதி: வார்டு 65
ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி: வார்டு 41
தி.நகர் சட்டமன்ற தொகுதி: வார்டு 130, 131, 132, 133, 134, 135, 141
வேளச்சேரி சட்டமன்ற தொகுதி: வார்டு 178, 180
மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி: வட்டம் 121, 123
சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி: வார்டு 139, 140
சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி: வார்டு 120
எழும்பூர் சட்டமன்ற தொகுதி: வார்டு 58, 99, 77, 108
வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி: வார்டு 84, 95, 98