ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் அன்னதானம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஏழை-எளியோருக்கு வழங்கினார்கள். இந்நிலையில் ரஜினியின் பிறந்தநாளையொட்டி மிக் ஜாம் புயலால் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு உதவிடும் வகையில்,நிவாரண பொருட்களை ரஜினிகாந்த் சார்பில் சென்னை ராகவேந்திரா திருமணமண்டபத்தில் இருந்து 4 லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது.
. . இந்நிலையில் 73வது பிறந்தநாளை கொண்டாடி வரும் ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் மட்டுமின்றி நடிகர்கள், இயக்குநர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என ஏகப்பட்ட ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் முக.ஸ்டாலின்:
அன்பிற்கினிய நண்பர் ‘சூப்பர்ஸ்டார்’
@rajinikanth அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் பல வெற்றிப்படங்களைத் தந்து உச்சநட்சத்திரமாக மக்களை மகிழ்விக்க விழைகிறேன்.
நடிகரும் மக்கள் நீதி மய்யக்கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்,தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது,”அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இன்றும் என்றும் வெற்றிகளை அறுவடை செய்தபடி உற்சாகமாக வாழ மனதார வாழ்த்துகிறேன். என குறிப்பிட்டுள்ளார். கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைதளத்தில், “தங்களுக்குத் தேவையானஏதோ ஒரு மின்னூட்டம் உங்களிடம் உள்ளதாக மக்கள் நம்புகிறார்கள் அதை மிக்க விலைகொடுத்துத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். கலை என்ற பிம்பத்தைவிட உங்கள் நிஜவாழ்க்கையின் நேர்மைதான்என்னை வசீகரிக்கிறது. எதையும் மறைத்ததில்லை. என்னிடம் நீங்கள் பலம், பலவீனம்,பணம், பணவீனம் எல்லாம் சொல்லியிருக்கிறீர்கள். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவேன்.உடல் மனம் வயது கருதிநீங்கள் எடுத்த அரசியல் முடிவு உங்கள் அமைதிக்கும் ஆரோக்கியத்துக்கும் வாழ்க்கையெல்லாம்வழிவகுக்கும் வாழ்த்துகிறேன். விரும்பும்வரை வாழ்க. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.நடிகர்கள் தனுஷ்,ராகவா லாரன்ஸ் உள்ளிட்டவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.