இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில்,சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்தியாவின் முதல் ஏலியன் படமாக அயலான் உருவாகியிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது..இந்நிலையில் அயலான் படத்திலிருந்து இரண்டாவது சிங்கிளான ‘அயலா அயலா நீ’ பாடல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று பாடல் வெளியாகியிருக்கிறது. பாடலை விவேக் எழுத; நரேஷ் ஐயரும், ஹ்ரிதாய் கட்டானியும் பாடியிருக்கின்றனர். இது ஏலியனை புகழும்படியான பாடலாக அமைந்திருக்கிறது.இப் பாடலை விவேக் எழுத; நரேஷ் ஐயரும், ஹ்ரிதாய் கட்டானியும் பாடியுள்ளனர்
அயலான் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர், சுந்தர். சி இயக்கியிருக்கும் அரண்மனை 4 ஆகிய படங்களும் வெளியாகவுள்ளதால் கடும் போட்டிஉருவாகியுள்ளது. மேலும் இப்படங்களுடன் . ரஜினி சிறப்புத்தோற்றத்தில் நடித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் லால் சலாம் படமும் பொங்கலுக்கு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.