இவர் கடந்த 2009ம் ஆண்டு தொழிலதிபர் திம்மி நரங்க் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இஷா கோபிகர் -திம்மி நரங்க் தம்பதிக்குப் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில்,இஷா கோபிகருக்கும் அவரது கணவருக்கும் இடையே சமீபகாலமாகக் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. என்றாலும் குழந்தையின் நலனைக் கருத்தில் கொண்டு இருவரும் சேர்ந்து வாழ முயற்சிகள் மேற்கொண்டனர்.
ஆனால் அவர்களது முயற்சி பலனளிக்கவில்லை. இதையடுத்து இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்றுவிட்டனர். இஷா கோபிகர் தனது மகளுடன் தனியாகச் சென்றுவிட்டார்.இஷா கோபிகர் சினிமா மட்டுமில்லாமல் தற்போது அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார் இதையடுத்து இஷா கோபிகரின் 14 ஆண்டு கால காதல் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.