மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகை சமந்தா,தற்போது அதிலிருந்து குணமடைந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறார் இந்நிலையிலும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ளும் வகையில், ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.இதை அவ்வப்போது வீடியோ பதிவுகளாக்கி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில்,சமந்தா தற்போது 2023ஆம் ஆண்டின் கடைசி ஒர்க் அவுட் என கூறி வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.இந்த வீடியோவில் கிட்டதட்ட 20 அல்லது 25 கிலோ வெயிட்டை அசால்டாக தலைக்கு மேல் தூக்கும் காட்சிகள் இடம் பெற்று உள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் ஆண்களுக்கே போட்டி கொடுக்கும் வகையில் சமந்தா உடற்பயிற்சி செய்வதாக கூறியுள்ளனர்.இவ்வீடியோ தற்போது இணையத்தில் சமந்தாவின் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.