இவருக்கு ஜோடியாக சிம்ரன் குப்தா நடிக்க, இவர்களுடன் ஆனந்தராஜ், சுப்ரமணியம் சிவா,மதுசூதனன்,சாமிநாதன் , ஜான் விஜய் ,பாவல் நவகீதன், ஜப்பான் குமார் உள்பட பலர் நடித்துள்ளனர்
இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றிய வெங்கி இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார். நகைச்சுவை திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள
இப்படம் குறித்து இயக்குனர் வெங்கி கூறியதாவது,”சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகலின் பிடியில் ஒரு கடத்தல் வைரம் சிக்கி விடுகிறது.அந்த விலை உயர்ந்த கடத்தல் வைரத்தை விமான நிலையத்திற்குள் புகுந்து கொள்ளையடிக்க ஒரு மேஜிக் நிபுணர் உள்பட 3 கும்பல்கள் திட்ட மிடுகின்றன.
ப்படத்தின் பெரும் பகுதி சென்னை விமான நிலையத்தில் நடப்பது போல் அமைந்துள்ளதால்,\ கோவை விமான நிலையத்தில் 2 நாட்கள் படமாக்கினோம். அதன் பின்னர் சில பாதுகாப்பு காரணங்களால் சென்னையில் உள்ள ஒரு மாலில், பெரும் பொருட் செலவில் பிரமாண்ட விமான நிலைய அரங்கு அமைத்து படமாக்கினோம். மேலும் சில காட்சிகள் ஹார்பரிலும் படமாக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 35 நாட்கள் இதன் படப்பிடிப்பு நடந்தது. இப்படத்தை வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளோம். என்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவை யுவா கார்த்திக் கவனிக்க, வி பி ஆர் இசையமைத்துள்ளார்.