இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள ராஜ் தேவ்.கூறியதாவது,..”அறியா பருவத்திலிருந்து பருவம் எய்தக் கூடிய காலகட்டத்தில் இளம் வயது காதலர்கள் இருவரும் சூழ்நிலை காரணமாக பிரிந்து விடுகிறார்கள் இந்நிலையில் நாயகிக்கு திருமணம் ஆகி விடுகிறது. அவளுக்கு திடீரென பழைய நினைவுகள் மறந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள்.
இந்நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு காதலன் தனது பிரிந்து போன இளவயது காதலியை திடீரென சந்திக்கிறான் நாயகன் ஆனால் அவளுக்கோ சுயநினைவு சுத்தமாக இல்லை இந்நிலையில், அவருக்கு ஒரு ஆபத்து ஏற்படுகிறது அந்த ஆபத்திலிருந்து அவளை மீட்டு ஹீரோ காப்பாற்றுகிறான். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் மனைவியை காணவில்லை என கணவன் போலீசில் புகார் செய்கிறார்
இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது இதில் நடிகை ஆண்ட்ரியா ஒரு குத்துப் பாடல் ஒன்றை பாடியுள்ளார் இவ்வாறு அவர் கூறினார் இப்படத்தின் ஒளிப்பதிவை யுவராஜ் எம் கவனிக்க,திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களுக்கு இசையமைத்த ஜுபின் இசையமைத்துள்ளார்.