சாமானிய மனிதர்களின் அறமும், சீற்றமும் சகமனிதர்களின் செயல்களால் எவ்வாறு வாழ்வில் வினைபுரிகிறது என்பதை கருத்தாளமிக்க கதையாக உருவாகியிருக்கும் படம் தான் ‘நாதமுனி’ என்கிறார் இயக்குனர் மாதவன் லக்ஷ்மன்.
சாமானிய தகப்பனாக இந்திரஜித் இந்த படத்தில் உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கிறார்.
ஏழைத்தாயாக இந்த படத்தில் ஐஸ்வர்யா தத்தா வாழ்ந்திருக்கிறார்.
பாடகர் அந்தோணிதாசன் மற்றும் ஜான் விஜய் மற்றும் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் இந்த படத்தில் வாழ்ந்திருக்கிறார்கள்.
படத்திற்கு முத்தான பாடல்களை உருவாக்கிக்கொடுத்துள்ளார்.
கங்கை அமரன் இந்த படத்தில் ஒரு பாடலை எழுதியிருக்கிறார்.
‘நாதமுனி ‘ மிகப்பெரிய தாக்கத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தும் என்றும் பாராட்டியுள்ளார்.படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.