“ஒத்த ஓட்டு முத்தையா” படப்பிடிப்பு நிறைவடைந்தது !

சினி கிராப்ட் புரடக்சன்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில், சாய் ராஜகோபால் இயக்கத்தில், கதையின் நாயகனாக கவுண்டமணி மற்றும் யோகி பாபு,சித்ரா லட்சுமணன்..’மொட்டை ராஜேந்திரன்- ரவிமரியா..ஓ ஏ கே சுந்தர் உள்ளிட்டவர்களின்    நடிப்பில் உருவாகி வந்த “ஒத்த ஓட்டு முத்தையா” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

இப்படத்தின் நாயகனான கவுண்டமணி, அரசியலில் தனக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் எப்படி சாமார்தியமாக சமாளிக்கிறார் என்பதை இயக்குனர் சாய் ராஜகோபால்  அனைவரையும் கவரும் வகையில் முழு நீள நகைச்சுவை திரைப்படமாக இயக்கி வருகிறார்.கடந்த மூன்று மாதங்களாக பரபரப்பாக நடந்து வந்த “ஒத்த ஓட்டு முத்தையா” படத்தின் படப்பிடிப்பு தற்போது  முடிவடைந்து..பூசணிக்காய் உடைக்கப் பட்டது..

இந்த படத்தில் மூன்று இளம் ஜோடிகளாக நடிகர் சிங்க முத்து மகன் வாசன்கார்த்தி-  பிந்து ,மறைந்த மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி- சாய் தான்யா, மறைந்த நடிகர் நாகேஷ் பேரன் கஜேஷ்-,அபர்ணா.ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தை வரும் கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.