’ஒடேலா 2’ கதையில் நடிகை தமன்னா பாட்டியா நாயகியாக நடிக்கிறார். இந்தக் கதை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் மத்தியில் பிரபலம் என்றாலும் ஓடிடியில் தனது சமீபத்திய ஹிட்களால் கவனம் ஈர்த்த தமன்னா இதில் இணைந்திருப்பது கதைக்கு கூடுதல் ப்ளஸ். இப்படத்தை பல மொழிகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். சம்பத் நந்தி திரைக்கதையில் அசோக் தேஜா இயக்கும் இப்படத்தை மது கிரியேஷன்ஸ் மற்றும் சம்பத் நந்தி டீம்வொர்க்ஸ் பேனர்களின் கீழ் டி மது தயாரிக்கிறார். இதன் வழக்கமான படப்பிடிப்பு இன்று காசியில் துவங்கியது.இப்படத்தில் ஹெபா பட்டேல், வசிஷ்டா என் சிம்ஹா, யுவா, நாக மகேஷ், வம்ஷி, ககன் விஹாரி, சுரேந்தர் ரெட்டி, பூபால் மற்றும் பூஜா ரெட்டிஉள்பட பலர் நடிக்கின்றனர்
’ஒடேலா 2’ கதை பல கோணங்களையும் ஆழமான வேர்களையும் கொண்டது. இதன் சீக்வல் கதை கிராமம், அதன் வளமான கலாச்சாரம், பாரம்பரிய மரபுகள் மற்றும் அதன் உண்மையான மீட்பர் ஒடேலா மல்லண்ண சுவாமி தனது கிராமத்தை தீய சக்திகளிடமிருந்து எப்போதும் எவ்வாறு பாதுகாக்கிறார் என்பதை மையமாகக் கொண்டுள்ளது.
ஹெபா படேல், வசிஷ்டா என் சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தக் கதையில் விஎஃப்எக்ஸ் முதன்மையானதாக இருக்கும். அதே நேரத்தில் ‘ஒடேலா 2’வில் அனைத்துப் பிரிவிகளையும் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் கவனித்துக் கொள்வார்கள். சௌந்தர் ராஜன் எஸ் ஒளிப்பதிவு செய்ய, ’காந்தாரா’ புகழ் அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். ராஜீவ் நாயர் கலை இயக்குநர். மேலும், படத்தின் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்தான விவரம் விரைவில் வெளியாகும்.