இந்த திரைப்படத்திற்கான மியூசிக் புரோமோஷனாக படத்தில் இருந்து சார்ட்பஸ்டர் முதல் பாடல் ‘நந்தனந்தனா’ சமீபத்தில் வெளியானது. இந்த பாடல் சமூக வலைதளங்களில் மில்லியன் பார்வைகளைக் கடந்து சென்சேஷனல் ஹிட் ஆகியுள்ளது. அப்படி இருக்கும்போது படத்தின் அடுத்தடுத்த அப்டேட்ஸ்க்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இன்று ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், படத்தின் டீசர் அறிவிப்பு மூலம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.