அங்கு அவருக்கு விரிவான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதில், அஜித்தின் மூளையில் ஒரு சிறிய கட்டி இருப்பது தெரியவந்ததாகவும், இதையடுத்து மதுரை மற்றும் கேரளாவில் இருந்து 2 சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அஜித் குமாருக்கு நேற்று இரவு மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும், .இந்த அறுவை சிகிச்சை சுமார் 4 மணி நேரம் நடைபெற்றதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இது குறித்து அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா கூறுகையில்,”விடா முயற்சி அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக தயாரானவர் அதற்கு முன்னர் வழக்கமாக தானும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள முடிவு செய்து மருத்துவமனைக்கு சென்றார். பரிசோதனையில் எல்லாம் நார்மலாகவே இருந்தது. நரம்பு தொடர்பான பரிசோதனையில் அவருக்கு காதில் இருந்து மூளைக்கு செல்லும் நரம்பில் கட்டி என சொல்ல முடியாதுமிக சிறிய புடைப்பு இருந்தது தெரிய வந்தது.அதை பரிசோதித்த மருத்துவர்கள் அது சாதாரண புடைப்பு தான் . இப்போதைக்கு எதுவும் தேவை இல்லை தேவை பட்டால் சிறிய அறுவை சிகிச்சை செய்து அகற்றி விடலாம் என கூறினர். அஜித்தோ மைனர் அறுவை சிகிச்சை தானே உடனே செய்து கொள்கிறேன் என கூறிவிட்டார். உடனடியாக லேசர் அறுவை சிகிச்சை வெறும் 20 நிமிடத்தில் நடந்து முடிந்து, அவரை சாதரண வார்டுக்கே அனுப்பி விட்டனர். இது தாங்க நடந்தது. அதற்குள் அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை என வதந்தி பரப்பி விட்டனர் . அஜித் சார் தற்போது முழு உடல் நலத்துடன் உள்ளார். இன்று மாலை அல்லது நாளை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார் இவ்வாறு அவர் கூறினார்