இதைத் தொடர்ந்து, சீனு ராமசாமி இயக்கத்தில் அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து மண் மணம் மணக்க உருவாகி வரும் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தில் நாயகனாக ஏகன் நடிக்கிறார்.
சகோதர-சகோதரி பந்தத்தை உணர்ச்சிப்பூர்வமாக வெளிப்படுத்தும் வகையில் உருவாகி வரும் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படத்தில் ஏகன் ஏற்றுள்ள பாத்திரம் இது போன்ற ஒரு அண்ணன் நமக்கு இல்லையே என்று படம் பார்ப்பவர்களை ஏங்க வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படத்தில் சீனு ராமசாமி இயக்கத்தில் யோகி பாபு உள்ளிட்டவர்களுடன் நடித்த அனுபவம் மிகவும் சிறப்பாக அமைந்ததாக ஏகன் தெரிவித்தார்.
தனது பயணத்தில் அடுத்த கட்டமாக முன்னணி இயக்குநர்கள் இயக்க உள்ள படங்களுக்கு ஏகன் ஒப்பந்தமாகியுள்ளார். இவற்றில் அவரது திறமையை வெளிப்படுத்தும் வகையில் பாத்திரங்கள் அமைந்துள்ளதாக ஏகன் கூறினார். இந்த திரைப்படங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
திரையுலகில் கதாநாயகனின் நண்பன் பாத்திரங்களில் நடிக்க தொடங்கி தற்போது நாயகனாக உயர்ந்துள்ள ஏகன், சவாலான வேடங்களில் நடிப்பது தனது விருப்பம் என்று கூறினார். “திறமைகளை அங்கீகரிப்பதில் தமிழ் ரசிகர்களுக்கு தனி இடம் உண்டு. அவர்களுடைய ஊக்கமும் ஆதரவும் எனக்கு தொடர்ந்து கிடைக்கும் என்று நம்புகிறேன்,” என்று ஏகன் மேலும் கூறினார்.
***