இயக்குனர் சூர்யா கிரண் காலமானார்!

 

நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் , விஜயகாந்த், பிரபு, சிரஞ்சீவி, நாகர்ஜுனா மற்றும் பாலிவுட் உலகின் முன்னணி நடிகரான அமிதாப்பச்சன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து சுமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளவர் சுரேஷ்,என்ற சூர்யா கிரண்.அவருக்கு வயது 49. .

இவருடைய தங்கை சுஜிதாவும் நடிகை தான். பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தற்போது சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.தெலுங்கு திரையுலகில் கடந்த 2003 இல் சுமந்த் மற்றும் ஜெனிலியா டிசோசா நடித்த சத்யம் படத்தின் மூலம் சூர்யா கிரண் என்ற பெயரில் இயக்குனராக அறிமுகமானார்.

பின்னர் அவர் தானா 51, பிரம்மாஸ்திரம், ராஜு பாய், மற்றும் அத்தியாயம் 6 போன்ற படங்களை இயக்கினார். இவர் தமிழில் கண்ணுக்குள் நிலவு, சமுத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகை காவேரி (கல்யாணி) என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மஞ்சள்காமாலை நோயினால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார் அவரது உடல் பொது மக்கள் பார்வைக்காக சென்னை கேகே,நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுஉள்ளது.இவரது மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.