நடிகர் சங்க கட்டிட பணிக்காக ரூ. 1 கோடி கொடுத்த விஜய்!

 

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கான முயற்சி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில்,கொரோனா தொற்று மற்றும் நிதி நெருக்கடி காரணமாக இந்த கட்டிடத்தின் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் தற்போது சங்க கட்டிடபணிகளை மீண்டும் தொடங்க, நடிகர் சங்க நிர்வாகிகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால் இடைப்பட்ட காலத்தில் 30 சதவீதம் விலைவாசி உயர்வு காரணமாக மீண்டும் எஞ்சிய கட்டிட பணிகளை முடிக்க ரூ 40 கோடி தேவை படுவதாகவும் இதற்காக வாங்கி கடன் வாங்கவும் முடிவு செய்துள்ளதாகவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்து இருந்தனர்

அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கட்டிடப்பணிக்காக அமைச்சர் உதயநிதி ஒரு கோடியும், உலக நாயகன் கமல்ஹாசன் ரூ. ஒரு கோடியும் வழங்கியுள்ளனர்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் ராஜசேகர கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் இணைந்து 25 லட்சத்திற்கான காசோலையை நாசரிடம் வழங்கினார்கள், தொடர்ந்து நடிகர் கார்த்தி 1 கோடி ரூபாய்க்கான காசோலையையும் நடிகர் விஷால் 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கி இருந்தனர்

இந்நிலையில்,நடிகர் சங்க கட்டிட பணிகளை தொடர தனது பங்காக விஜய் அவரது செந்த நிதியில் இருந்து ஒரு கோடி ருபாய் நன் கொடையாக வழங்கி இருக்கிறார் என நடிகர் சங்கம் நன்றி அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.