ஏன்னா, என உடம்பு, இங்க இல்ல பல மருத்துவமனைகளுக்கும் , சிங்கப்பூர் எலிசபெத், அமெரிக்காவில் இருக்கும் மருத்துவமனை வரை போய் வந்துள்ளது. அதனால் மருத்துவமனை, அட்வான்ஸ் தொழில்நுட்பம், மருத்துவர்கள், நர்ஸ்களின் உதவியினால் தான் வாழ்ந்துட்டு இருக்கேன்.இந்த இடத்தை பார்க்கையில் பழைய நினைவுகள் வருகிறது. சுமார் 45 ஆண்டுகள் முன்னாடி இந்த இடத்தில் தான் அவுட்டோர் ஷுட்டிங் முடித்த பிறகு சில பேட்ச் அப் காட்சிகளை படமாக்குவோம். அதன் பிறகு சம்சாரம் அது மின்சாரம் படத்துக்காக வீடு ஒன்றை நிஜமாக கட்டி, தெருக்கள் அமைத்து செட் போட்டார்கள். அந்த படத்தை இயக்கி, நடித்திருந்தார் அமரர் விசு. அதன் பிறகு அந்த வீடு ராசியான வீடா கி விட்டது. அந்த வீட்டில் ஒன்று அல்லது இரண்டு சீன்கள் படமாக்கினால் படம் ஹிட்டாகிவிடும். இந்த சென்டிமென்ட் காரணமாக நான் நடித்த சில படங்களின் காட்சிகளும் அங்கு படமாக்கப்பட்டிருக்கிறது. இப்போ இந்த ராசியான இடத்துல மருத்துவமனை கட்டி இருக்காங்க. ஒரு மருத்துவமனைக்கு நோயாளியாகவோ அல்லது நோயாளியை பார்ப்பதற்கோ போவோம். நான் நோயாளியாக ஆள்வார்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அங்கு முக்கிய ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றார்கள்.ஆபரேஷன் போவதற்கு முன்னா ல் சர்ஜரி செய்ய இருந்த மருத்துவர் 99 சதவீதம் குணமாகி விடுவீர்கள், ஒரு சதவீதம் வாய்ப்பு குறைவு என்றார். அவர் சொன்ன அந்த ஒரு சதவீதம் மட்டும்தான் மண்டையில் ஓடிக்கொண்டிருந்தது.அருமையான பங்களா, பர்னிச்சர், கிரைனட் எல்லாம் இருக்கு, அப்படியே ஒரு நாகப்பாம்பும் இருக்கு பார்த்துக்கோங்கான்னு சொன்ன மாதிரி இருந்துச்சு. ஆபரேஷன் முடிஞ்ச பிறகு என்னிடம் சக்ஸஸ் என்றார்கள்.மருத்துவமனையில் இருந்த 15 நாட்கள் மிகவும் பாஸிடிவாக இருந்தேன்.
மனிதனுக்கு தேவையான நான்கு முக்கிய விஷயங்கள்.ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய முக்கிய விஷயமாக ஒழுக்கம் உள்ளது. இது இல்லாதவர் யாரும் முன்னேற முடியாது. இதற்கு அடுத்து இரண்டாவது விஷயமாக நாணயம். இது இருந்தால் பொய், பித்தலாட்டம் இருக்காது.மூன்றாவதாக அர்பணிப்பு, கடின உழைப்பு. இந்த நான்கு விஷயங்கள் இருக்கும் யாராக இருந்தாலும் கவனிக்க படுவார்கள். வாழ்க்கையிலும் முன்னேறுவார்கள். ஆள்வார்பேட்டை மருத்துவமனை விரிவாக்கம் செய்ய சில பகுதிகளை அவர்கள் எடுத்துக்கொண்டார்கள். முதலில் இந்த மருத்துவமனை எங்கிருக்கிறது என்று கேட்டால் கமல்ஹாசன் வீட்டுக்கு அருகே உள்ளது என்பார்கள்.
ஆனால் இப்போது கமல்ஹாசன் வீடு, இந்த மருத்துவமனை பக்கத்தில் இருக்கிறது என்கிறார்கள். இதை கமல்ஹாசன் தப்பா எடுத்துக்க கூடாது. மீடியாக்களே, இது சும்மா சொல்றதுதான். கமல்ஹாசனை கலாட்டா பண்ணிட்டார்னு எழுதிடாதிங்க.இங்க வந்ததும் இத்தனை கேமராக்களை பார்த்ததும் பயமாயிருச்சு. எலெக்ஷன் டைம்னால மூச்சு விடவே பயமா இருக்கு.சென்னை இந்தியாவின் மெடிக்கல் தலைநகரமாக இருக்கிறது சந்தோஷமாக உள்ளது. இது தமிழர்களுக்கு மிகவும் பெருமையான விஷயம்.நான் ஒரேயொரு விஷயம் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். இப்போது மருத்துவ செலவுகள் என்பது அதிகமாகிவிட்டது. பணக்காரர்கள் மட்டும் செய்து கொள்ளும் விஷயமாக உள்ளது. வசதி இல்லாதவர்களுக்கு செய்து கொள்ளும் விதமாக நன்கொடை போன்றவற்றை செய்வதன் மூலம் அவர்களும் பயன் அடைவார்கள், உங்களுக்கும் புண்ணியம் வந்து சேரும்”இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.