ஸ்ருதிஹாசனுடன் ‘ரொமான்ஸ்’காட்சிகளில் லோகேஷ் கனகராஜ் !

உலகநாயகன் தயாரிப்பில், ஸ்ருதிஹாசன்  ’இனிமேல்’ என்ற ஆல்பத்தை, இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன்  இணைந்து நடித்து, இசையமைத்து உருவாக்கி வருகிறார். இந்த ஆல்பம் பாடலை கமல்ஹாசன் எழுதியுள்ளார் இதன்  படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது  தொழில்நுட்ப பணிகள்  நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது ராஜ்கமல் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில்,  ’இனிமேல்’ ஆல்பம் வரும் மார்ச் 25ஆம் தேதி ராஜ்கமல் பிலிம்ஸ்  நிறுவனத்தின் யூடியூப்  பக்கத்தில் வெளியாகும்  என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த ஆல்பத்தின் 18 வினாடி டீசர் வீடியோ ஒன்றும் தற்போது  வெளியாகி உள்ளது. இதில் ஸ்ருதிஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவருக்குமான ரொமான்ஸ் காட்சிகள், கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது, படுக்கையில் புரள்வது போன்ற காட்சிகள் இடம் பெற்று  உள்ளது. இது சமூக வலைதளங்களில்  தீயாக பரவி வருகிறது.