டைரக்‌ஷனைவிட நடிப்பு சுலபமா இருக்கு.! இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக நடிகை ஸ்ருதிஹாசனுடன் இணைந்து இனிமேல் என்ற இசை ஆல்பத்தின் மூலம் நடிகராகவும் களமிறங்கியுள்ளார் இந்த பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்ற இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறுகையில்,நடிப்பது ஈசியாக இருந்தாலும் இனிமேல் நடிப்பதில் ஆர்வமில்லை . இப்பாடல் காட்சியில் நடித்தான் மூலம் எனக்கு கேமரா கூச்சம் போய்விட்டது. என்னை இந்தப் பாடலுக்கு நடிக்கக் கூப்பிட்டப்போ எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. அப்புறம் அவுங்க டீம் வந்து ஐடியா சொன்னாங்க. அதுக்குப் பிறகு இந்தப் பாடலைப் பண்ணலாம்னு தோணுச்சு.

நான் கமல் சார் பத்திதான் என்னுடைய கரியர்ல இத்தனை நாள் பேசிருக்கேன். நான் வர்ற ஒரு காட்சில அவரோட குரல் வர்றது கண்டிப்பாகச் சொல்லிக்கிற மாதிரியான விஷயங்கள்ல ஒன்றாக இருக்கும். டைரக்‌ஷனைவிட நடிப்பு சுலபமா இருக்கு. எனக்கு நடிக்கணும்னு முழு ஆசை இல்ல. அப்படியான ஆசை எனக்கு இருந்தால் எனக்குப் பிடிச்ச படம் ‘பொல்லாதவன்’. அது மாதிரி ஒரு கதை பண்ணி என் அசிஸ்டென்ட் கிட்ட கொடுத்து நடிப்பேன். ஆனா, அப்படி ஆசை இல்லை.என்னை இந்தப் பாடலுக்காக நம்புனாங்க. ராஜ்கமல் பிலிமிஸ் நிறுவனம் எனக்கு வீடு மாதிரி. அவங்க சொன்னதை நான் மறுக்கமாட்டேன்.

‘லியோ’ படத்துக்காக கமல் சாரை ஒரு வசனம் பேசுறதுக்காகக் கூப்பிட்டேன். அவர் எதுவுமே கேட்காம, 24 மணி நேரத்துக்குள்ள வந்து 5 மொழில பேசிக் கொடுத்துட்டு போனாரு. இந்தப் பாடலுக்கான ஷூட்டிங் மூணு நாள்தான் நடந்தது.இப்போ நான் என் படத்தோட கதை வேலைகள்ல இருக்கேன். ஜூன் மாசத்துல ‘தலைவர் -171’ படத்தோட ஷூட்டிங் போறோம். இந்தப் பாட்டுல நான் வேலை பார்க்க ஒத்துகிட்டதுக்கு மூணு காரணம் இருக்கு.