விநாயக் வைத்தியநாதன் கூறுகையில், “நான் ‘ரோமியோ’ படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதி முடித்ததும் விஜய் ஆண்டனி சார் அதில் நடிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டேன். ஆனால், கதை அவருக்கு பிடிக்குமா என்ற சந்தேகம் இருந்தது. ஏனெனில், ரொமாண்டிக் – காமெடி ஜானரில் இதுவரை அவர் நடித்ததில்லை. ஆனால், அவர் கதையை கேட்டு, ரசித்து உடனடியாக படத்தைத் தயாரித்து நடிக்க ஒப்புக் கொண்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
சீனியர் நடிகர்களுடன் பணியாற்றுவது உண்மையில் பெரிய சவாலாக இருந்தது. நான் புதுமுகம் என்பதால் தலைவாசல் விஜய் சார், யோகிபாபு சார், வி.டி.வி.கணேஷ் சார் போன்ற மூத்த நடிகர்கள் எனது ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்களா என்ற சந்தேகம் இருந்தது. ஆனாலும், படப்பிடிப்பில் அவர்கள் ஆதரவாக இருந்தனர். அவர்கள் தங்களுடைய சிறப்பான நடிப்பால் காட்சிகளை உண்மையாகவே மெருகேற்றினார்கள். மிருணாளினி ரவி இந்த பாத்திரத்திற்கு சிறந்த நடிப்பைக் கொடுத்துள்ளார். ‘ரோமியோ’ படம் நகைச்சுவை, ரொமான்ஸ், எண்டர்டெயின்மெண்ட் மற்றும் எமோஷன் கலந்த ஒரு விறுவிறுப்பான பொழுதுபோக்கு படமாக இருக்கும். ‘ரோமியோ’ படத்தைப் பார்த்துவிட்டு பார்வையாளர்கள் சிரிப்புடனும் முழு திருப்தியுடனும் தியேட்டர்களை விட்டு வெளியேறுவார்கள்” என்றார்.