இந்நிலையில் வேறொரு படத்துக்காக இந்த கடனை ஏற்றுக்கொண்ட லைகா நிறுவனம் பின்னர் அதனை அடைத்தது.ஆனால் அந்த கடனை திரும்ப செலுத்தாத விஷாலுக்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கும் ஏற்கனவே தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி. ஆஷா, ரத்னம் படத்துக்காக விஷாலுக்கு வழங்க வேண்டிய நிலுவைச் சம்பளத் தொகை 2 கோடியே 60 லட்சம் ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த,சம்பந்தப்பட்ட திரைப்படத்தை தயாரித்த ஸ்டோன் பெஞ்ச் என்ற படதயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள், எம்.சுந்தர் மற்றும் கே.ஜி. திலகவதி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், விஷால் மனுவுக்கு லைகா நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு, இவ்வழக்கு தொடர்பான விசாரணையை வரும் புதன்கிழமைக்கு (ஏப்.3) தள்ளிவைத்தனர்.