ராயல் பி. புரடக்சன்ஸ் பட நிறுவனம் நான்சி ஃப்ளோரா தயாரிப்பில், இயக்குநர் டி. அரவிந்த் தேவ் ராஜ் இயக்கத்தில், ஹாரர் திரில்லராக உருவாகியுளள புதிய படம் “நெவர் எஸ்கேப்”. இப்படத்தில் ஆதி பிருத்வி, ஹர்ஷினி முதன்மைப்பாத்திரங்களில் நடிக்க, நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர் முதன்முறையாக எதிர்மறை பாத்திரத்தில் மிரட்டியுள்ளார். இவர்களுடன் கவி ஜெ.சுந்தரம், உவைஸ் கான், ராஜி, அகிலா சுந்தர், ஜெபின் ஜான், பிரணேஷ்வர், சஷ்டி பிரணேஷ் இணைந்து நடித்துள்ளனர்.’
ஒரு சிக்கலிலிருந்து தப்பிக்க நினைத்து வேறொரு ஒரு இடத்தில் சிக்கிக்கொள்ளும் 7 நண்பர்கள், அங்கு அவர்களுக்கு ஏற்படும் அமானுஷ்ய சம்பவங்கள் தான் படத்தின் மையம்’. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக சென்னை வேலூர் பகுதியை ஒட்டிய ஆரணியில் படமாக்கப்பட்டுள்ளது. மிக வித்தியாசமான வகையில் இப்படத்தின் மூன்று பாடல்களில் ஒரு பாடல், முழுக்க ஆங்கிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர், நடன இயக்குநர் ராபர்ட் பேசுகையில்,”இப் படத்தின் கதை சொன்ன போது, யார் சார் டைரக்டர் என்று கேட்டேன், அரவிந்தைப் பார்த்தால் இயக்குநர் என்றே நம்பமுடியவில்லை. மூச்சு விடாமல் கதை சொன்னார். கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மொட்டை அடிக்க வேண்டும் என்றார்கள் தாடி எடுக்க வேண்டும் என்றார்கள் நான் வேறு ஒரு படத்தில் நடித்து கொண்டிருந்தேன், அவர்களிடம் பெர்மிஷன் வாங்கி இப்படத்தில் நடித்தேன். அதற்குக் காரணம் இவர்கள் மீதுள்ள அன்பு தான். நல்ல டீம் கடுமையாக உழைத்துள்ளனர்.
இப்படத்தில் என்னை வித்தியாசமாக பார்ப்பீர்கள், ரசிகர்களை சிந்திக்க வைக்கும் வகையில், அடுத்தடுத்த ஆச்சரியங்களுடனும், எதிர்பாராத திருப்பங்களுடனும் புதுமையான திரைக்கதையில், ஒரு முழுமையான ஹாரர் படமாக இப்படத்தை இயக்குனர் உருவாக்கியுள்ளார் என்கிறார்.இப்படத்தின் ஒளிப்பதிவை சந்தோஷ் குமார் கவனிக்க,சரண் குமார். இசையமைத்துள்ளார்.