தமிழக பிஜேபி தலைவர் கே. அண்ணாமலைக்கு சுதந்திரமாக செயல்படுகிற மீடியாக்களை பிடிக்காது. அவரது தலைமைக்குக் கட்டுப்பட்டும் ,அவரது நாக்பூர் தலைமையின் கட்டுப்பாட்டில் இருக்கிற மீடியாக்களையும் மட்டுமே பிடிக்கும் என்பது நாடறிந்த உண்மை. இதனால்தான் சுயமரியாதையுடன் இயங்குகிற மீடியாக்களை மிரட்டுகிறார். போலீஸ் பாணியில் தடாலடியாக நடந்து கொள்கிறார்.
இவர் மீது வெறுப்புதான் இருக்கிறது.
அரசியலில் பொறுப்புணர்வுடன் செயல்படுகிற கட்சிகளில் மக்கள் நீதி மய்யமும் ஒன்று.
இதன் மீடியா மாநில செயலாளராக இருக்கிற முரளி அப்பாஸ் அண்ணாமலையை ஒரு பிடி பிடித்திருக்கிறார்.
“தமிழக செக்கு எது சிவலிங்கம் எது என்று தெரியாத அண்ணாமலை நாக்கு இன்று எங்கள் தலைவர் பக்கம் திரும்பியிருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளாக நிழல் கேப்பிடலாக இருக்கும், நாக்பூர் மீண்டும் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் நிஜ கேப்பிட்டலாக மாறிவிடும் என்பது மூளையிருப்பவனுக்கு புரியும். அண்ணாமலைக்கு?”என்று கேட்டிருக்கிறார்.
நியாயம்தானே ?