அஜித்துக்கு நடிக்கவே விருப்பமில்லை ! பிரபல இயக்குனர் அதிர்ச்சி தகவல்!!
By
admin on April 16, 2024
அஜித் தற்போது ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை தொடர்ந்து அவரது 63-வது படத்தை (குட் பேட் அக்லி) ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். இப் படத்தின் அலுவலக பூஜை, சென்னையில் சமீபத்தில் நடந்து முடிந்தது தற்போது இப்படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது விடாமுயற்சி படப்பிடிப்பின் போது, அஜித்தும், ஆரவ்வும் கார் விபத்துக்குள்ளான வீடியோக்களை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இந்நிலையில்,அஜித் நடிப்பில் ஜி படத்தை இயக்கிய லிங்குசாமி ,வீடியோ பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது, “நான் ‘ஜி’ படத்தை எடுக்கும் போது அஜித்துக்கு அந்த நேரத்தில் படத்தில் நடிக்கவே ஆசை இல்லை.எனது படம் மட்டுமில்லாமல் வேறு எந்த படத்திலும் நடிக்கவும் அவருக்கு விருப்பம் இருக்கவில்லை. அவருக்கு முழுக்க முழுக்க அப்போது கார் ரேஸ் மீதுதான் ஆர்வம் இருந்தது” எனக்கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.