இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான பவன் கல்யாண், முதன்முறையாக ‘ஹரி ஹர வீர மல்லு’ என்ற பீரியட் ஆக்ஷன் அட்வென்ச்சர் கதையில் நடித்துள்ளார்.இதில் பவன் கல்யாணுடன் நடிகை நிதி அகர்வால், நடிகர் பாபி தியோல், சுனில், நோரா ஃபதேஹி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசை மற்றும் பின்னணி இசையமைக்கிறார். ஞானசேகர் விஎஸ் மற்றும் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வருகின்றனர் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார். 17 ஆம் நூற்றாண்டில் நடக்கும் ஆக்ஷன் அட்வென்சர் கதை என்பதால் அதற்கேற்றவாறு, ‘சார்மினார்’, ‘செங்கோட்டை’ மற்றும் மச்சிலிப்பட்டினம் துறைமுகம்’ போன்ற பிரம்மாண்டமான செட்களை பெரிய பட்ஜெட்டில் சிறப்பாக உருவாக்கியுள்ளனர். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இப்படத்தின் டீசரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இரண்டு பாகங்களாக படம் வெளியாக இருக்கிறது. இந்த டீசரில் பவன் கல்யாணின் ஹரி ஹர வீர மல்லு கதாபாத்திரம் நீதிக்காகப் போரை நடத்தும் ‘தனி போர் வீரன் என வர்ணிக்கப்பட்டுள்ளது. இதில்,முகலாயப் பேரரசராக பாபி தியோலும், ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்களின் நாயகனாக பவன் கல்யாணும் நடித்துள்ளனர். இப்படத்தின் இயக்குநர் கிரிஷ் ஜகர்லமுடி ஏற்கனவே ‘காஞ்சே’, ‘கௌதமிபுத்ர சதகர்ணி’ மற்றும் ‘மணிகர்னிகா’ போன்ற படங்களை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது., ‘படையப்பா’, ‘நட்புக்காக’ போன்ற படங்களின் எழுத்தாளரும், ‘எனக்கு 20 உனக்கு 18’, ‘நீ மனசு எனக்கு தெலுசு’, ‘ஆக்ஸிஜன்’ போன்ற படங்களை இயக்கியவருமான இயக்குநர் ஜோதி கிருஷ்ணா இப்படத்தின் எஞ்சியுள்ள காட்சிகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை கிரிஷ் ஜகர்லமுடி மேற்பார்வையில் முடிக்க உள்ளார்.இப்படம் 2024ஆம் ஆண்டின் இறுதியில் வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.