மசாலா பாப்கார்ன் மற்றும் ஒயிட் பெதர் ஸ்டுடியோஸ் பட நிறுவனங்கள் சார்பில் ஐஸ்வர்யா எம்.சுதா ஆர் இணைந்து தயாரித்துள்ள புதிய படம் . நன்பன் ஒருவன் வந்த பிறகு .இப் படத்தின் மூலம் ஹிப்ஹாப் ஆதி யின் ‘ மீசைய முறுக்கு ‘ படத்தில் நடித்த ஆனந்த் ,இயக்குநராக அறிமுகமாவதுடன் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார்.
இவருடன்,லீலா, குமரவேல், விஷாலினி, வெங்கட்பிரபு,ஐஸ்வர்யா எம், பவானி ஸ்ரீ, ஆர்ஜே விஜய், இர்பான், வில்ஸ்பட், பூரணேஷ், கேபி பாலா , மோனிகா , ஆர்ஜே ஆனந்தி , சபரிஷ், குகன், என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இப்படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் உறவினர் ஏ.எச்.காஷிப் இசையமைத்துள்ளார் ஒளிப்பதிவை தமிழ்ச்செல்வன் கையாண்டுள்ளார்.
இப்படம்கூறித்து இயக்குனர் அனந்த் கூறுகையில்,” என் வாழ்க்கையில் என் நன்பனுக்கு நடந்த ஒரு விஷயம் தான் இப்படத்தின் கதை உருவாக காரணம்,வெகு சில படங்களே தனக்கு தானே ஒரு பட்டாளத்தை இளைஞர்கள் பேமிலி என அமைத்து கொள்ளும் அந்த வகையில் இப்படமும் அமைந்துள்ளது
சென்னை28 பாய்ஸ், என்றென்றும் புன்னகை மாதிரியான படங்களின் வரிசையில் இப்படமும் சேர்ந்து கொள்ளும்.இந்த படத்தின் மூலம் 5 ஹீரோஸ் தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கிறார்கள் என பட வெளியீட்டுக்கு பிறகு கட்டாயம் சொல்வீர்கள்.நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள இப்படத்தில் பிரபல யு டியூபர்கள் இர்பான்,மதன்கவுரி ஆர்ஜே விஜய் ஆகியோரும் நடிச்சு இருக்காங்க இந்தப்படம் இரண்டு விஷயங்களை மெயினா பேசுகிறது
ஒன்னு நட்பு இன்னொன்னு நாம இருக்கிற இடம்,இடம் ஒருவனின் வாழ்க்கையில் என்னவெல்லாம் கொடுக்கும் அதாவது சின்னவயசில நம்ம ஏரியாவில் நமக்கு பிரண்ட்ஸ் இருப்பாங்க அப்புறம் ஸ்கூல் பிரன்டஸ் ,அடுத்தது காலேஜ் பிரண்ட்ஸ் அப்புறம் வேலைக்கு போனதும் அங்கு கிடைக்கும் நண்பர்கள் இப்படி நம்ம வாழ்க்கையின் ஒவொரு கட்டத்திலும் நன்பர்கள் இணைந்து கொண்டே இருப்பார்கள்.
இது எல்லாமே ஒருவனின் வாழ்க்கையில் அதாவது அவனின் வாழ்க்கையில் நண்பன் என்ற ஒருவன் வந்ததுக்கு அப்புறம் அவனின் வாழ்க்கையில் என்னவெல்லாம் மாற்றங்கள் நிகழ்கிறது என்பதை ஒரு எமோஷனல் ரோலர் கோஸ்டரா,ஜாலியா குடும்பமா சேர்ந்து பார்க்கிற படமா இது இருக்கும்.
இந்த படத்துல நடிகர் தனுஷ்,யுவன்சங்கர் ராஜா,,ஜி.வி.பிரகாஷ் ஹிப்பாப் தமிழாஆதி ஆகியோர் பாடியுள்ளது எங்களுக்கு கிடைத்த பெருமை யாக கருதுகிறோம், இவ்வாறு அவர் கூறினார் .