நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, ‘பீனிக்ஸ்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை சண்டை பயிற்சியாளர் அனல் அரசு இயக்கி வருகிறார். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.இந்நிகழ்வில் விஜய் சேதுபதி மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், “திட்டமிடாமல்தான் இதெல்லாம் நடந்தது. நானும், அனல் அரசும் ஒரு பயணத்தில் பழைய நினைவுகளை பேசிக்கொண்டு வந்தோம். அனல் அரசு எனது மகனிடம் கதை சொல்லி இந்தப் படத்துக்கு அவர் சரியாக இருப்பார் என்று கூறினார்.
சூர்யாவிடம் கேளுங்கள் அவனுக்கு சரி என்றால் எனக்கும் சரிதான் என்று அனலிடம் நான் சொன்னேன். அவன் ஹீரோவாவான் என்று நான் துளியும் கற்பனை செய்யவில்லை. எனது பையன் இந்தத் துறைக்கு வரும்போது, ‘இங்கு சர்வைவ் ஆவது ரொம்ப கஷ்டம்’ என்று கூறினேன். ஏனெனில் நான் இங்கு சர்வைவ் பண்ண எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பது நான் சொல்லி அவனுக்கு தெரியும்.
இதில் ஒவ்வொருமுறையும் நிறைய அழுத்தங்களை எதிர்கொள்கின்றோம். எனது மகனுக்கு இந்தத் துறையில் எவ்வளவு பாரம் இருக்கும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அவனுக்கு இதுதான் பிடித்திருந்தது.அவன் மாஸ் கமர்சியல் படம் பண்ண தான் ஆசைப்படுகிறான் . அதுதான் அவனுக்கும் பிடிக்கும். விஜய், ரஜினி, கமல், அஜித் போல அவங்களுடைய மாஸ் படங்களை தான் போல பார்ப்
பான். அதைப்போல தான் அவன் பண்ண வேண்டும் என்று ஆசைப்படுகிறான் இந்த டீசரை பார்த்து உண்மையில் நான் மகிழ்ந்தேன். சூர்யா பிறந்து 19ஆவது தந்தையர் தினத்தை கொண்டாடியுள்ளேன். இதுதான் எனது மிகச்சிறந்த தந்தையர் தினம்” இவ்வாறு அவர் பேசினார்