வித்தியாசமான அணுகுமுறை. எழுதி இயக்கிய ராகுல் கபாலிக்கு வாழ்த்துகள் சொல்லலாம். சற்றே இடறினாலும் மொத்த படத்தின் பார்வையும் சிதறிவிடக்கூடும் ஆபத்து இருந்தாலும் துணிச்சலுடன் கதை பயணித்திருக்கிறது. பலன் கிட்டியதா ?
கொலைக்குற்றவாளியின் வாழ்க்கையை புத்தகமாக எழுதுகிறார் ஓர் எழுத்தாளர். அந்த நாவலை வாசிக்கிறவர்கள் முக்கிய கதாபாத்திரமாகவே தங்களை உணருகிறார்கள் என்பதே அந்த வித்தியாசமான அணுகுமுறை. அதுதான் பயமறியா பிர ( ம் )மை .
இயல்பாக ஒரு கேரக்டரை வெளிக்கடத்துவதில் நடிகர் குரு சோமசுந்தரம் சிறந்தவர். அவர்தான் கதையின் நாயகன். கொலை செய்வதும் ஒரு கலைதான் என செயல்படுகிறவர் . இவரை ரசிக்க முடிகிறது.குற்ற உணர்வே இல்லாமல் கொலைகளை செய்வதற்கு கூசாத மாறுபட்ட மனிதனை பிரதிபலித்திருக்கிறார்.96 கொலைகளை செய்தவர் என்கிறார்கள் . ஆனால் இவர் யார்? அதை சொல்லவில்லையே!
எழுத்தாளராக நடித்திருக்கிறார் வினோத்சாகர் .முக்கிய கேரக்டரில் ஜேடி . மற்றும் சாய் பிரியங்கா ரூத்,ஜான் விஜய்,விஸ்வந்த், ஹரீஷ் உத்தமன், திவ்யா கணேஷ் ஆகிய அனைவருமே கேரக்டரை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இதனால் ஜான் விஜய்யின் எக்ஸ்ட்ரா உருட்டு மிஸ்ஸிங்.!
நந்தா, பிரவீன் ஆகியோரின் ஒளிப்பதிவு பலம்.
கே இசை. பாடல்சுகம். கவிதை வரிகள் அருமை. ஆழமிக்கவை . கேட்கலாம்.ரசிக்கலாம்.
எழுதி இயக்கியிருக்கிறார் இராகுல் கபாலி.தமிழ்ச் சினிமாவுக்கு அவசியமானவர்.
அது சரி ‘பயமறியா பிரம்மை’ பொழுது போக்கு படமா ?
நக்கல் நையாண்டி பண்ணுவதில் நம்ம ரசிகர்கள் கெட்டிக்காரர்கள் ।
–தேவிமணி .