தி லெஜண்ட்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் தொழிலதிபர் சரவணன் அருள். இப்படத்தை தொடர்ந்து ‘லெஜண்ட்’ சரவணன் ‘கருடன்’ படத்தை இயக்கிய துரை செந்தில் குமாருடன் கூட்டணி அமைத்துள்ளார். இவர்களது கூட்டணியில் உருவாகவுள்ள புதிய படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.