நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அமரன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் இப்படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருக தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன்-ஆர்த்தி தம்பதிகளுக்கு ஏற்கனவே ஆராதனா என்ற மகளும், குகன் தாஸ் என்ற மகனும் உள்ள நிலையில், கடந்த மாதம் சிவகார்த்திகேயனுக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு பவன் சிவகார்த்திகேயன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயர் சூட்டு விழா சிவகார்த்திகேயனின் இல்லத்தில் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் நடந்து முடிந்துள்ளது. இது குறித்த வீடியோவை சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் .