நடிகர் அஜித் தற்போது ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் விடா முயற்சி படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. படப்பிடிப்புகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தாலும் அவ்வப்போது கிடைக்கும் இடைவெளியில், கார் ரேஸிங், டெஸ்டிங் போன்ற விஷயங்களிலும்அஜித், முழு ஈடுபாடு காட்டி வருகிறார். இது குறித்த வீடியோக்களும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. கார் ரேஸிங் மீது அதிகம் ஆர்வம் கொண்ட அஜித், பல விதமான கார்களையும் சொந்தமாக வாங்கி வைத்துள்ளார். இந்நிலையில்,அஜித் தற்போது சுமார் ரூ.9 கோடி மதிப்புள்ள ஒரு புது ‘பெராரி’ (எஸ் எப் 90 ஸ்டராடேல்) காரை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.காருடன் அஜித் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.