நடிகை சமந்தவுடனான விவாகரத்துக்கு பின்னர் நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தார்இருவரும் அடிக்கடி டேட்டிங் செய்தும் வந்தனர் .ஆனால் இருவரும் தங்களின் காதல் குறித்து தொடர்ந்து மவுனம் சாதித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி திடிரென நடிகர் நாகார்ஜுனா வீட்டில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடத்தி முடிக்கப்பட்டது. இது குறித்து புகைப்படங்களுடன் நடிகர் நாகார்ஜுனா தனது சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டார் ஆனால் திருமண தேதி குறித்து இதுவரை எந்த வொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் நடிகை சோபிதா துலிபாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் தனது அப்பாவுடன் சிறுவயதில் எடுத்துக் கொண்ட மூன்று புகைப்படங்களை வெளியிட்டு பதிவிட்டுள்ளதாவது,’ஒவ்வொரு பிறவியிலும் நான் எனது அப்பாவுக்கும், அம்மாவுக்கும் மகளாக பிறக்க வேண்டும். எனது தங்கை சமந்தா நாயாகவோ அல்லது வேறு எதுவாகவோ பிறக்கட்டும். அதைப் பற்றி கவலையில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.இப்பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சோபிதா, நடிகை சமந்தா மீது கொண்ட ஆத்திரத்தில் தான் இப்படி மறைமுகமாக தாக்கியுள்ளார் என சமந்தாவின் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். நடிகை சோபிதாவின் தங்கை பெயரும் சமந்தா தான் என்பதும் இவர் ஒரு டாக்டர் என்பதும், கடந்த ஆண்டு தான் அவருக்கும், டெல்லியை சேர்ந்த டாக்டர் சாஹில் குப்தாவுக்கும் திருமணம் நடந்தது என்பதும், அக்கா இருக்க, தங்கைக்கு திருமணமா என பேச்சு கிளம்பியதும் குறிப்பிடத்தக்கது