நடிகர் தனுஷ் நடித்து இயக்கிய ‘ராயன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதை தொடர்ந்து தற்போது ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தின் மூலம் தனுஷ் தனது அக்கா மகனை ஹீரோவாக அறிமுகம் செய்கிறார். சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதன் காரணமாக இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தை தொடந்து தனுஷ் தன் அடுத்த படத்தின் படப்பிடிப்பையும் தொடங்கியுள்ளார். டான் பிக்சர்ஸ் தயாரிப்பில், தனுஷ் இயக்கத்தில் நான்காவது படமாக உருவாகி வரும் இப்படத்தில் நடிகை நித்யா மேனன், நடிகர்கள் சத்யராஜ், அருண் விஜய், அசோக் செல்வன்,ராஜ்கிரண் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகின்றனர்
திருச்சிற்றம்பலம் பட கூட்டணி மீண்டும் இணைந்துள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. பக்காவான கிராமத்து கதையம்சம் கொண்ட படமாக உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தனுஷின் சொந்த ஊரான தேனியில் நடந்து வருகிறது. இப்படமும் ஒரு பீல் குட் படமாக உருவாகி வருகிறது என்கிறார்கள்.இந்நிலையில் இப்படத்திற்கு ‘இட்லிக்கடை’ என பெயரிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தனுஷின் 52 ஆவது படமாக வெளியாக உள்ளது.