‘மங்காத்தா’ படத்தை தொடர்ந்து ‘குட் பேட் அக்லி’ படத்திலும் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட அஜித்குமாரின் நியூ லுக் புகைப்படங்களைபடக்குழு அவ்வப்போது இணையத்தில் வெளியிட்டு வருகிறது இது அஜித் ரசிகர்களை உற்சாகமடைய செய்து வருகிறது .இந்நிலையில், ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித் மாஸான கேங்ஸ்டர் என்றால் அவருக்கு வில்லன் யார்? அஜித்தே வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றால், அவரை எதிர்த்து நிற்கும் சூப்பர் வில்லன் யார் என்ற கேள்வி பலருக்கும் இருந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர் பிரசன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இப்படத்தில் நெகடிவ் கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்திப் போகக்கூடிய அர்ஜுன் தாஸ், அஜித்துடன் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.இது குறித்து அர்ஜுன்தாஸ் கூறியுள்ளதாவது,”நான் முதன்முதலாக சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தப்போது அஜித் சாரின் மேலாளர் டீமில் வேலைசெய்யும் வாய்ப்பு கிடைத்தது . அதன் மூலம் பல முன்னணி இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அஜித் சாருடன் நெருங்கிப் பழகியுள்ளேன். அவருடன் ஷூட்டிங் செல்வது, பட புரோமோசன்களில் ஈடுபடுவது, படங்களுக்கு மார்க்கெட்டிங் செய்வது போன்ற வேலைகளைச் செய்தேன். வீரம் படத்தின் டீசரை அப்லோட் செய்ததே நான் தான்.என்னை ரசிகர்கள் பலமுறை, ‘ எப்போது அஜித் சாருடன் இணைந்து பணியாற்ற போகிறீர்கள்?’ என கேட்டுள்ளனர்.அவர்களுக்கு இப்போது பதில் சொல்கிறேன். நான் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கிறேன். விஜயுடன் மாஸ்டர் படத்தில் நடித்ததைப் பார்த்துவிட்டு அஜித் சார், எனக்கு போன் செய்து வாழ்த்தியது மட்டும் இல்லாமல், விரைவில் இணைந்து பணியாற்றலாம் எனவும் கூறினார். தற்போது என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பினைக் கொடுத்த, அஜித் சார், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு நன்றிகள்” என பதிவிட்டுள்ளார்.