நடிகை அஞ்சு குரியனுக்கு நிச்சயதார்த்தம்!

மலையாளத்தில்  பிரேமம், ஓம் சாந்தி ஓசானா, ஞான பிரகாசன் உள்ளிட்ட பல படங்களில்  நடித்துள்ள அஞ்சு குரியன், தமிழிலும் நேரம் படத்தின்மூலம்  அறிமுகமானார்.. தொடர்ந்து சென்னை டூ சிங்கப்பூர் படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர், அடுத்தடுத்து சில நேரங்களில் சில மனிதர்கள், சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது பிரபு தேவாவுடன் இணைந்து ‘வுல்ஃப்’ படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில்  அஞ்சு குரியனுக்கு .ரோஷன் கரிப்பா என்பவருடன்   நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. தனது திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து,’தங்களுடைய இந்த பயணம் சந்தோஷம் மற்றும் அன்பால் நிறைந்துள்ளதாகவும் இந்த நேரத்தில் கடவுளின் ஆசிர்வாதமும் நிறைந்துள்ளதாகவும்  குறிப்பிட்டுள்ளார். இப்பதிவு மற்றும் நிச்சயதார்த்த புகைப்படங்களை பார்த்த பலரும் அவருக்கு  பார்த்த அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.