.இசைஞானி இளையராஜா தனது இசைக்கோர்ப்புகளையும் பாடல்களையும் பின்னணி இசையையும் வெளியிடும் வகையில், புதியதாக யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளார். இதில் தனது பின்னணி இசைகள் தொடங்கி, சிம்பொனி, இசைக்கச்சேரிகள் என பலவற்றை பதிவிடஉள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இளையராஜா அங்கு கூடியிருந்த ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகை ஒருவர் சினிமாவில் ஏன் அதிக பெண் இசையமைப்பாளர்கள் இல்லை எனக் கேட்டபோது, இளையராஜா உடனே சற்றும் யோசிக்காமல், “நீ வயேன், வந்துடு வந்துடு.. யோசிக்கவே வேண்டாம், ஆல் த பெஸ்ட்” எனக் கூறினார். இளையராஜாவின் பதிலால் அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது