தமிழ்திரையுலகில் காஜல் அகர்வால், எமி ஜாக்சன், மடோனா செபாஸ்டியன், மாளவிகா மோகனன், ராஷி கண்ணா மற்றும் தீபிகா படுகோன் போன்ற பல நடிகைகளுக்கு ‘டப்பிங்’ பேசி பிரபலமானவர் நடிகை ரவீனா ரவி.இவர் டப்பிங் கலைஞர் மட்டுமில்லாமல், ராக்கி, வீரமே வாகை சூடும், லவ் டுடே மற்றும் வட்டார வழக்கு போன்ற படங்களிலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில்வெளியான, ‘மாமன்னன்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார் இந்நிலையில் நடிகை ரவீனா ரவி தனது இன்ஸ்டா பக்கத்தில் , வாலாட்டி படத்தை இயக்கிய தேவன் ஜெயக்குமாருடன் நெருக்க எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, ‘தேவன் ஜெயக்குமார் தான் என்னுடைய காதலர்’ என பகிரங்கமாக அறிவித்துள்ளார். இந்த ஜோடியின் திருமண அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என தெரிகிறது.