அவரது பிறந்தநாளான நவம்பர் 18 அன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் எக்ஸ்க்ளூசிவாக இது ப்ரீமியராகிறது.
தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அதிகம் வெளியில் பகிர்ந்திடாத நடிகை நயன்தாராவின் இதுவரை கண்டிராத அழகிய பக்கத்தை இந்த டாக்குமெண்ட்ரியில் ரசிகர்கள் கண்டு களிக்கலாம். தங்கள் கனவுகளையும் இலக்குகளையும் அடைய நினைப்பவர்களுக்கான உத்வேகமாக இந்த டாக்குமெண்ட்ரி இருக்கும்.
மகளாக, சகோதரியாக, வாழ்க்கைத் துணையாக, அம்மாவாக, தோழியாக, தொழில்துறையில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக அவரது பல முகங்களை இந்த டாக்குமெண்ட்ரியில் பார்க்கலாம்.
இந்தியா முழுவதும் உள்ள நயன்தாரா ரசிகர்களுக்கு சிறந்த பிறந்தநாள் பரிசை நெட்ஃபிலிக்ஸ் தருவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். நவம்பர் 18 அன்று ’நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்’ வெளியாகிறது.