தமிழ்த்திரையுலகில் விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வந்த ஜே எஸ் கே, ‘அநீதி’, ‘வாழை’, உள்ளிட்ட படங்களின் மூலம் நடிகராகவும் முத்திரை பதித்துள்ளவர்,தற்போது இயக்குநராகவும், ‘ஃபயர்’ திரைப்படத்தின் மூலம் களமிறங்கியுள்ளார். இப்படத்தில்,பாலாஜி முருகதாஸ், ஜே எஸ் கே,,ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான், சாந்தினி தமிழரசன், சிங்கம் புலி, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பத்மன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசும் இப்படம் குறித்து அதன் இயக்குனர் ஜே எஸ் கே, கூறுகையில்,”இப்படம் தமிழகத்தையே உலுக்கிய ஒரு உண்மை சம்பவத்தால் உந்தப்பட்ட விறுவிறுப்பான திரில்லர் ஆகும்.இன்றைய காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்தும், அதை அவர்கள் எவ்வாறு கடந்து வருவது என்பது குறித்தும் மாறுபட்ட கோணத்தில் இப்படம் அலசும்,சென்சார் போர்டின் ‘ஏ’ சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் சென்சார் அதிகாரிகளின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. சமுதாயத்திற்கு தேவையான துணிச்சலான கருத்துடன் உருவாகியுள்ள ‘ஃபயர்’, வயது வந்த அனைவரும் கட்டாயம் காண வேண்டிய படமாக தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படைப்பாக இருக்கும்”.என்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவை சதீஷ் ஜி பாபு கவனிக்க,அறிமுக இசையமைப்பாளர் டி கே இசையமைத்துள்ளார்.