பாலிவுட் சினிமாவில் பிரபல நாயகியாக வலம் வரும் நடிகை திஷா பதானி , தமிழில் சூர்யாவின் கங்குவா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்துள்ளார். இதையடுத்து சூர்யாவுடன் ஜோடி சேர்ந்துள்ள தனக்கு ஆரம்பமே அமர்க்களமாக அமைந்து இருப்பதாகவும் தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்காக காத்திருப்பதாகவும் கூறி வரும் திஷா பதானி ,தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது முகம் சுழிக்க வைக்கும் ‘தாராள’ கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் ஒரு பக்கம் வைரலாகி வந்தாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியதாக கூறப்படும் கங்குவா படத்தை பார்த்து ஏற்கனவே கடுப்பில் இருக்கும் ரசிகர்கள், இணையத்தில் அப்படத்தின் நாயகி திஷா பதானியின் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து விட்டு, ‘இதுக்குத்தான் லாயக்கு’ என அவரை திட்டி பதிவிட்டு வருகின்றனர்.