விமலின் 35வது படமாக உருவாகும்  ‘பெல்லடோனா’!

‘யூபோரியா பிலிக்ஸ்’ பட நிறுவன தயாரிப்பில், சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில், விமலின் 35வது  படமாக உருவாகி வரும் புதிய படம்  ‘பெல்லடோனா’.  சூப்பர் நேச்சர் ஹாரர் படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மணிப்புரி உள்ளிட்ட  16 மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தில், தேஜஸ்வினி ஷர்மா கதாநாயகியாக நடிக்க,  இன்னொரு கதாநாயகியாக மணிப்பூரை சேர்ந்த மேக்சினா பவ்னம் நடிக்கிறார். இப்படம் குறித்து இயக்குநர் சந்தோஷ் பாபு முத்துசாமி கூறுகையில், “இந்த படம் விமல் சாருக்கு  ஒரு புதுவிதமான அனுபவத்தை கொடுக்கும். மிகவும் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டு நன்றாக வந்துள்ளது. இந்த கதைக்கு ஏற்றார் போல் சக நடிகர்களும் அமைந்துள்ளனர். கேமராமேன், எடிட்டர், மியூசிக் டைரக்டர் என அனைவரும் மிக பக்கபலமாக இருந்து உழைத்து வருகின்றனர்.இதுவரை இல்லாத வகையில் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த படம் இருக்கும்” என்கிறார்.இப்படத்தின் ஒளிப்பதிவை வினோத் பாரதி கவனிக்க, ஏசி ஜான் பீட்டர் இசையமைக்கிறார்.இப்படத்தின் அனைத்து பாடல்களையும் இயக்குநர் சந்தோஷ் பாபு முத்துசாமியே எழுதி இருக்கிறார். இப்படத்தின் மற்ற விபரங்கள் விரைவில் வெளி யாகும் என்கிறது படக்குழு.