இந்நிலையில் தான் ஏஆர் ரஹ்மான் – சாய்ரா பானு ஆகியோர் பிரிவதாக அறிவித்துள்ளனர். இதன்மூலம் அவர்களின் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. சாய்ரா பானு தனது கணவர் ஏஆர் ரஹ்மானை பிரிவதாக அவரது வழக்கறிஞர் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
” சாயிரா பானு, அவரது கணவர் ஏஆர் ரஹ்மான் ஆகியோரின் சார்பில் வந்தனா மற்றும் அவரது அசோசியேட்ஸ் சார்பில் இந்த கூட்டு அறிக்கை வெளியிடுகிறது. திருமணமாகி பல வருடங்கள் கழித்து சாய்ரா பானு மற்றும் அவரது கணவர் ஏஆர் ரஹ்மான் ஆகியோர் பிரியும் கடினமான முடிவை எடுத்துள்ளனர். உணர்ச்சிகரமான அழுத்ததற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருவரும் ஒருவரையொரும் ஆழமாகவும் நேசித்தாலும் கூட சிரமம் மற்றும் பதற்றங்கள் இருவருக்கும் இடையே தீர்க்க முடியாத இடைவெளியை ஏற்படுத்தியதை இருவரும் அறிந்துள்ளனர்.இந்த இடைவெளியை இணைக்க யாராலும் பாலம் போல் செயல்பட முடியாது. இதனால் இந்த முடிவை வலி மற்றும் வேதனையுடன் சாய்ரா பானு, ஏஆர் ரஹ்மான் எடுத்துள்ளனர். இந்த இக்கட்டான நேரத்தில் சாய்ரா பானு, ஏஆர் ரஹ்மான் ஆகியோரின் தனிப்பட்ட உணர்வுக்கு மதிப்பளித்து அனைவரும் செயல்பட வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏ.ஆர். ரகுமானை பிரிந்த அவரது மனைவி,சாய்ரா பானு, தன்னுடைய விவாகரத்துக்கான காரணம் குறித்து கூறியிருப்பதாவது,”திருமணமாகி பல வருடங்கள் கழித்து தனது கணவர் ஏ ஆர் ரஹ்மானிடமிருந்து பிரிந்து செல்லும் கடினமான முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவானது தங்களது உறவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க உணர்ச்சிப்பூர்வமான அழுத்தத்திறுகு பிறகு ஏற்பட்டது. மிகுந்த வலி மற்றும் வேதனையில் தான் இந்த முடிவை தான் எடுத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்த இக்கட்டான நேரத்தில் தங்கள் நிலையை புரிந்துகொண்டு மக்கள் அனைவரும் தங்களுக்கான தனிமையை கொஞ்சம் தரவேண்டும் என்று கூறியுள்ளார்.
இந் நிலையில் தான் மனைவியின் இந்த விவாகரத்து அறிக்கைக்கு பிறகு மன வேதனையோடு ஏ ஆர் ரஹ்மான் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: நாங்கள் 30 வயதை எட்டுவோம் என்று நம்பினோம். ஆனால், எல்லாமே கண்ணுக்கு தெரியாத முடிவாகத் தான் தெரிகிறது. கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தில் நடுங்க கூடும். இந்த சிதைவில் இன்னும் சில துண்டுகள் மீண்டும் தங்கள் இடத்தை கண்டுபிடிக்கவில்லை என்றாலும் கூட அதற்கான அர்த்தத்தை தேடுகிறோம்.மேலும், உடைந்தவை மீண்டும் சேராது.நண்பர்களுக்கு, இந்த பலவீனமான அத்தியாத்தை கடந்து செல்லும் போது உங்களது அன்புக்கும், எங்களது தனியுரிமைக்கும் மதிப்பளித்ததற்கு நன்றி என்று கூறியுள்ளார்.