இந்த படத்தில் சரவணன் மீனாட்சி தொடர் மற்றும் பிக்பாஸ் 6 வது சீசன் மூலம் பிரபலமான ரக்ஷிதா மஹாலஷ்மி மற்றும் சமீபத்தில் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற அயலி படத்தின் மூலம் பிரபலமான அபி நட்சத்ரா, நேரம் படத்தை தொடர்ந்து ரெஜினா படங்கள் உட்பட சிறந்த படைப்புகளில் நடித்துவரும் ஆனந்த் நாக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மற்றும் இவர்களுடன் அம்ரிதா ஷெல்டர், படத்தின் தயாரிப்பாளர் ராஜ்குமார், சிவம் ஆகியோர் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது,” இது ஒரு சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படம்.Xtreme என்றால் உச்சக்கட்டம், தீவிரம், அளவுக்கு அதிகம்னு சொல்லுவோம்.எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு. ஆனால் அதை மீறும்போது நடக்குற விளைவுதான் இந்த படத்தின் கதை.
Human அப்படின்றதே சுய கட்டுப்பாட்டோடு இருப்பதுதான்.
அதை மீறும்போது மிருகமாக மாறிவிடுகிறோம்.
சுய கட்டுப்பாட்டோட இருக்கிறவங்களையும், சில பெண்கள் சுதந்திரம் என்ற பெயரில் பண்ற சில சம்பவங்களால் பாதிக்கப்படுவதும் ஒரு பெண்தான், அதற்கு தீர்வு சொல்லுவதும் ஒரு பெண்தான் என்பதை மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறோம்.
இந்த கருத்து பெண்களுக்கு எதிரானதாக இருப்பதாக கூறி நிறைய பேர் நடிக்க மறுத்து விட்டனர்.
ஆனால் பெண் குழந்தைகளை பெற்ற எல்லா பெற்றோர்களும் கண்டிப்பா Accept பண்ணுவாங்க அப்படியொரு முக்கியமான கருத்தை அனைவருக்கும் சொல்லவிருக்கிறோம் படம் இமாதம் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என்றார் இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா.