ஜெயிலர் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தின் தனது 171-வது படமான ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.பான் இந்தியா படமாக உருவாகி வரும் இப்படத்தில் ரஜினியுடன் சவுபின் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சுருதிஹாசன்என தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் முன்னணி நடிகர்கள் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். .இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து முடிந்தநிலையில், தற்போது சென்னை, விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் 2ம் கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது.தற்போது . ஜெய்ப்பூரில் நடக்கும் படப்பிடிப்பில் பாலிவுட் நடிகர் அமீர்கான் இணைந்து நடித்து வருவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு கூலி படத்தில் இடம்பெறும் ‘சிகித்து வைப்’ என்கிற பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அனிருத் இசையமைத்த இப்பாடலை டி. ராஜேந்தர் மற்றும் அறிவு பாடியுள்ளனர்.இந்த பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.