சமீபகாலமாக திரையுலக பிரபலங்கள் பலர் விவாகரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ், தனுஷ், ஜெயம் ரவி,ஏ. ஆர். ரஹ்மான் உள்ளிடவர்களின் வரிசையில் தற்போது பிரபல திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமியும் இணைந்துள்ளார். தனது 17 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “அன்பானவர்களுக்கு வணக்கம் நானும் எனது மனைவி .ஜி எஸ்.தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம். இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும் அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும் எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன்.அவரும் அறிவார்.இப்பிரிவுக்கு உதவும் படி சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளோம். இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும் அதன் உரிமைக்கு மதிப்பளிக்கும் தங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு ஊக்கம். அன்புடன் சீனு ராமசாமி” என பதிவிட்டுள்ளார்.சீனு ராமசாயின் திருமண முறிவு அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் சீனு ராமசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது மனைவியும் மகள்களும் சேர்ந்து சீனு ராமசாமியின் கவிதைகளை நூலாக்கி வெளியிட்டு இன்ப அதிர்ச்சி அளித்தனர்.’சொல்வதற்கு சொற்கள் தேவையில்லை’ என்ற அந்த கவிதைத் தொகுப்பை சீனு ராமசாமிக்கே தெரியாமல் அவரது மனைவி, மகள்கள் தயாரித்து வழங்கியது குறிப்பிடத்தக்கது