எஸ் ஒய் ஜி (சம்பராலா ஏடி கட்டு ) என இந்த திரைப்படத்திற்கு பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த வீடியோவில் சக்திமிக்க.. தனித்துவமான குரல் வழியாக கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. அவை ஒவ்வொன்றும் கதாநாயகனின் மர்மம் மற்றும் தோற்றத்தை காண்பதற்கான ஆர்வத்தை அதிகரிக்கிறது. மேலும் அந்த குரல்கள் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி, சாய் துர்கா தேஜின் அறிமுகத்திற்கான வலுவான களத்தையும் அமைக்கின்றன. அவர் ஒரு மரத் துண்டின் மீது அமர்ந்து மறக்க இயலாத வகையில் அறிமுகமாகிறார். மேலும் அந்த அற்புதமான காட்சியில் அவருடைய முதுகிலிருந்து ரத்தம் தோய்ந்த ஒரு சிறிய கத்தியை அகற்றி.. எதிரி மீது வீசி, தன் கோபத்தை கட்டவிழ்த்து விடுகிறார். இந்த டீசர் டீசரில் சாய் துர்கா தேஜின் சக்தி வாய்ந்த வசனங்கள்.. உச்சத்தை தொடுகிறது.
அறிமுக இயக்குநர் ரோகித் கேபி, சாய் துர்கா தேஜின் கதாபாத்திரத்தை வாழ்க்கையைக் காட்டிலும் ஒரு பிடிவாதமான பார்வையுடன் வடிவமைத்துள்ளார். உரையாடல்கள் கூர்மையாகவும், ஆற்றல் மிக்கதாகவும் இருக்கிறது. மேலும் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மாண்டமான தயாரிப்பின் அளவும், தரமும் பிரதிபலிக்கிறது. ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் பழனிச்சாமி பார்வையாளர்கள் மூச்சடைக்கக்கூடிய காட்சிகளை கதையின் தன்மைக்காக படம் பிடித்திருக்கிறார். இசையமைப்பாளர் பி. அஜ்னீஷ் லோக்நாத்தின் துடிப்பான இசை.. கதையை ஒரு புதிய உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது. படத் தொகுப்பம் நவீன பாணியில் அமைந்திருக்கிறது.